76.98 F
France
September 8, 2024
இலங்கைவிளையாட்டு

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி..!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 461 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து தமது இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி போட்டியின் நான்காம் நாளான நேற்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சர்பாக Dhananjaya de Sliva 82 ஓட்டங்களையும் Nishan Madushka 64 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் Noman Ali, Abrar Ahmed ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 131 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நான்காவது நாள் ஆட்டம் நிறைவின் போது 3 விக்கெட்டுக்களை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்நிலையில்,  போட்டியின் இறுதி நாளான இன்று ஆட்டத்தை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

பாகிஸ்தான் அணி சார்பில் இமாம் ஹுல் ஹக் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதன்படி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது.

Related posts

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும்…!

News Bird

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷடம்..…!

News Bird

சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் பொலிஸாரினால் முற்றுகை!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0