கேகாலை வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்தினை பெற்றுக் கொண்ட நபர் ஒருவர் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த 10ஆம் திகதி கல்லீரல் பாதிப்பு காரணமாக கேகாலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதன் பின்னர் அவருக்கு 13 நோய் எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்பட்ட நிலையில், 14வது நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்ததால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளதாக ஆண்டிபயாடிக் மருந்து இவ்வாறு கொடுக்கப்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், அன்றைய தினம் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்ட 19 வது நோயாளி அவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக காணப்பட்ட காரணத்தால் இவ்வாறு ஒவ்வாமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் கேகாலை ஆதார வைத்தியசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 57 வயதான கேகாலை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.