75.18 F
France
July 27, 2024
இந்தியாஇலங்கை

இலங்கை ஜானாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று மாலை இந்தியாசென்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று புதுடெல்லி சென்ற இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் விமான நிலையத்துக்குச் சென்று வரவேற்றார். குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்க உள்ள ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்புஉறவு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இலங்கை அதிபராக கடந்த ஆண்டு ஜூலையில் பதவிஏற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது.

இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவு தொடங்கப்பட்டதன் 75-ம் ஆண்டு தற்போது நடைபெற்று வரும்நிலையில், இலங்கை அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவுடனான நல்லுறவுக்கு முக்கியத்துவம் அளித்து அதை தனது வெளியுறவுக் கொள்கையின் முக்கியதிட்டமாக மாற்றியுள்ள ரணில் விக்ரமசிங்க, அமெரிக்க டாலருக்கு இணையானதாக இந்திய ரூபாயின்பயன்பாடு இருக்க வேண்டும் என விரும்புவதாக கடந்த வாரம் கூறி இருந்தார்.

ரணில் விக்ரமசிங்கேவின் இந்திய பயணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறைஅமைச்சகம், “அண்டை நாடுகளுக்கு முதல் முன்னுரிமை எனும் இந்திய வெளியுறவுக் கொள்கையின்படிஇலங்கை இந்தியாவுக்கு முக்கிய பங்குதாரர். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால நட்புறவைமீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையில் பல்வேறு துறைகளில்இணைந்து செயல்படுவதை ஊக்குவிப்பதாகவும் இலங்கை அதிபரின் இந்த பயணம் இருக்கும்என்றுதெரிவித்துள்ளது.

Related posts

வைத்தியசாலையில் 40 அடி பள்ளத்தில் விழுந்த கார்..!.

News Bird

நல்லூர் கந்தன் ஆலய,திருவிழா தொடர்பான முக்கிய அறிவிப்பு (வீடியோ)

News Bird

ட்விட்டருக்கு வந்த சோதனை | ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் ஃபேஸ்புக்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0