82.38 F
France
February 22, 2025
சினிமா

கேப்டன் தோனி தயாரிக்கும் ஹரீஷ் கல்யாணின் ‘எல்ஜிஎம்’ பட ரிலீஸ் எப்போது? – வெளியான அறிவிப்பு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்புநிறுவனமான தோனி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், தமிழில் ஹரீஷ் கல்யாண் மற்றும் இவானா முதன்மைகதாபாத்திரத்தில் நடிக்கும் ‘Let’s get married-LGM’ என்ற படத்தை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர்ரமேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தோனி, அவரது மனைவி சாக்ஷி தோனி, ஹரீஷ் கல்யாண், இவானா, யோகி பாபு மற்றும்படக்குழுவினர் கலந்து கொண்டனர். காதல் கதையை மையமாக வைத்து வெளியான ட்ரெய்லர் நல்ல வரவேற்புபெற்ற நிலையில், இப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தற்போதுஅறிவித்துள்ளது.

மேலும், இப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் இயக்குநரே, இசையும்அமைத்துள்ளார். பிரதீப் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

.

 

 

 

Related posts

சிம்பு மீது புகார் கொடுத்த பிரபல தயாரிப்பாளர்! அடுத்த படத்திற்கு வந்த சிக்கல்

news

அரசியல் களத்தில் குதிக்கும் நடிகர் விஜய்?

News Bird

பிக் பாஸ் லாஸ்லியா GYM-ல் நண்பனுடன் வெறித்தனம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0