82.38 F
France
January 18, 2025
விளையாட்டு

அதிரடி காட்டிய மேற்கிந்திய தீவுகள்

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிணக்க கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் Sherfane Rutherford ஆட்டமிழக்காமல் 68 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் Trent Boult 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 150 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Glenn Phillips அதிகபட்சமாக 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Alzarri Joseph 04 விக்கெட்டுக்களையும், Gudakesh Motie 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய குழு c இலிருந்து சுப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக  மேற்கிந்திய தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது.

Related posts

மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார் இகா ஸ்வியாடெக்

News Bird

இலங்கை அணித் தலைமையில் இருந்து விலக நான் தயார்..!

News Bird

உலகக் கிண்ண தகுதிச் சுற்று தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0