78.78 F
France
September 12, 2024
விளையாட்டு

இலங்கை அணிக்கு அபார வெற்றி!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள்
சர்வர்தேச கிரிக்கெக் ட் போட்டியில் இலங்கை அணி 132 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக் ஷவிளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில், இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

இதற்கமைய, அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்டட் 50 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெக்ட்டுக்களை
இழந்து 323 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக குசல் மெண்டிஸ் 78 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 52
ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹம்மட் நபி 52 ஓட்டங்களுக்கு 02
விக்கெக்ட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 19 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 324 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெக்ட்டுக்களையும் இழந்து 191
ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 1 – 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.

Related posts

ஆசிய கிண்ண டிக்கெட்டுக்களின் விலை குறைப்பு.!

News Bird

இலங்கை அணி நேரடியாக உலகக்கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

News Bird

இலங்கை வந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு நேர்ந்த கதி.!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0