82.38 F
France
March 28, 2025
இலங்கை

அலி ஸாஹிர் மௌலானாவும் ரணிலுக்கு ஆதரவு!

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சற்றுமுன்னர் சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நசீர் அஹமட்  பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அலி சாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினராக கடந்த 2023 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

நசீர் அஹமட் எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு தாவி அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நிலையில், அவரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ய முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்தது. இதற்கு எதிராக நசீர் அஹமட் உயர்நீதிமன்றத்தை நாடிய போதும், அவரின் உறுப்புரிமையை இரத்தானதை உயர்நீதிமன்றம் சரியென தீர்ப்பளித்தது.

இதன்படி அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போனதால், அந்த ஆசனத்திற்கு அலி ஸாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டிருந்தார்.

Related posts

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்..! (வீடியோ)

News Bird

உறக்கத்திற்கு தொந்தரவாக இருந்த நாய்க்குட்டிகளை தீ மூட்டி கொலை – யாழில் நடந்த கொடூர செயல்

News Bird

நுவரெலியாவில் கத்தி குத்து : தானாகவே சரணடைந்த குற்றவாளி (வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0