76.98 F
France
September 8, 2024
இலங்கை

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினர் கிழக்கு மாகாணஆளுநருடன் சந்திப்பு

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் காணப்படும்மாகாண, மாவட்ட ரீதியான பிரச்சினைகள் குறித்து ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பாகவும், உள்ளூராட்சி மன்றங்கள் உட்பட அரச திணைக்களங்களில் அமைய அடிப்படையில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

மட்டகளப்பு மாவட்டத்தில் குருமன்வெளி மண்டூர், குருக்கள் மடம் அம்பாலந்துறை, சந்திவெளி திகிலிவெட்டை போன்ற பிரதேசங்களை இணைக்கும் ஆற்றின் இடையில் இருக்கும் பாதைகளுக்கு அறவிடப்படும் கட்டணங்களை நீக்குதல், பண்ணையாளர்களின் கால்நடைகள் துன்புறுத்தப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் போன்ற பல கோரிக்கைகள்ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டன.

இப்பிரச்சினைகளைக் கவனத்திற்கொண்ட ஆளுநர், குறித்த இடர்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச்சலுகையை நீடிப்பு..!

News Bird

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இழப்பீட்டை மைத்திரிபால சிறிசேன செலுத்தினார்

News Bird

43 பயணிகளை யாழிலிருந்து கொழும்பு எற்றி சென்ற அதிசொகுசு பஸ் தீக்கிரையானது

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0