84.18 F
France
October 12, 2024
இந்தியா

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் தினத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொலைநோக்கு பார்வையுடன் அதிக வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஏன் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இதேவேளை புதிய நாடாளுமன்றம் திறக்கும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 19 கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் குறித்த தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டிக்கவும்  தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தனது காதலனை தேடி வந்த இளம் காதலி..!

News Bird

விரைவில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெற்றோலிய குழாய்..!

News Bird

எலான் மஸ்க் அடுத்த அதிரடி : ட்விட்டர் பதிவு படிக்க கட்டுப்பாடு விதிப்பு

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0