76.98 F
France
September 8, 2024
விளையாட்டு

5வது முறையாக ஐபிஎல் போட்டியின் மகுடத்தை தன்வசப்படுத்தியது சென்னை அணி

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஆண்டுக்கான சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அதன்படி சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் போட்டியின் மகுடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்களைப் பெற்றது.

அவ்வணி சார்பாக சாய் சுதர்சன் 58 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 96 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க சென்னை அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் மதிஷ பத்திரன 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதில் இன்னிங்ஸ் விளையாட சென்னை அணி களம் இறங்கியபோது, மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி சென்னை அணிக்கு 15 ஓவர்களில் 171 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 171 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என பதில் இன்னிங்சை தொடங்கிய சென்னை அணி,15 ஓவர்கள் முடிவில் வெற்றி இலக்கை கடந்தது.

இறுதி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா, கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதிசெய்தார்.

Related posts

அதிரடி காட்டிய மேற்கிந்திய தீவுகள்

News Bird

16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று

news

சரித் அசலங்கவை 80,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுத்த Jaffna Kings

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0