82.38 F
France
December 11, 2024
சினிமா

குடும்பத்தோடு இளையராஜா கேக் வெட்டி கொண்டாடிய 80-வது பிறந்தநாள்! வைரலாகும் போட்டோஸ்!

இசைஞானி இளையராஜா, தன்னுடைய 80-ஆவது பிறந்தநாளை… குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இசையுலகின் ராஜாவாக, பல ரசிகர்கள் மனதை ஆச்சி செய்து வருபவர் இளையராஜா. தற்போதைய இளம் இசையமைப்பாளர்களுக்கு, தன்னுடைய ஈடு இணையில்லா இசை மூலம் 80 வயதிலும்செம்ம டஃப்  கொடுத்து வருகிறார் ராஜா. மேலும் இவரின் இசை சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவருக்கும் ஃபேவரட்டாக இருந்து வருகிறது

அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் பயணம், 40 ஆண்டுகளைக் கடந்து இன்று விடுதலை வரை நீடித்து வருகிறது. இசை மீதான தீராத காதலால்,  80 வயதிலும்… ஓய்வின்றி உழைத்து வருகிறார் இளையராஜா.

இந்நிலையில் இளையராஜா இன்று, தன்னுடைய 80-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், பிரபலங்கள் முதல் அரசியல் வாதிகள் வரை காலை முதலே தங்களின் வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலமாகவும் நேரில் சென்றும் தெரிவித்து வருகிறார்கள். இதை தொடர்ந்து இளைய ராஜா தன்னுடைய குடும்பத்தினருடன், இந்த வருட பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை, இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

பொதுவாக இளைய ராஜாவுக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுவதில் அதிக உடன்பாடு இருந்தது இல்லை என்றாலும், குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக தாண்டிய 80 வது பிறந்தநாளை கேக்குடன் கொண்டாடியுள்ளார். மேலும் இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில், வெங்கட் பிரபு, பிரேம் ஜி, கங்கை அமரன், பாவதாரணி, வாசுகி பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். யுவன் மட்டும் மிஸ் ஆனது ஏன் என்றும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

ரகசியத் திருமணத்தில் நடந்தது என்ன..? தேவயானிக்கும் நடிகர் சிங்கமுத்துவிற்கும் இப்படி ஒரு உறவா..?

News Bird

சன்னி லியோனுடன் காம லீலைகள்..!

News Bird

சீரியல் நடிகை வாணி போஜனின் முக அழகிற்கு என்ன காரணம் தெரியுமா?- அவரே சொன்ன டிப்ஸ்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0