82.38 F
France
December 11, 2024
இந்தியாசினிமா

பிரபல நடிகரை கன்னத்தில் பளார் என அறைந்த இயக்குனர் மாரி செல்வராஜ்.. இவரா இப்படி நடந்துகொண்டது

இயக்குனர் மாரி செல்வராஜ் மீது ரசிகர்கள் பலரும் அளவுகடந்த அன்பையும், மரியாதையையும் வைத்துள்ளனர். அதை அவர் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் காப்பாற்றிக்கொண்டே வருகிறார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் என இரு திரைப்படங்களையும் மக்கள் எதிர்பார்ப்பை தாண்டி வெற்றிபெற செய்தனர். அடுத்ததாக இவருடைய இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் வருகிற 29ஆம் தேதி வெளியாகிறது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதன் முதலில் வெளிவந்த படம் பரியேறும் பெருமாள் என்பதை அனைவரும் அறிவோம். இப்படத்தில் கதாநாயகனின் தந்தையின் கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் நெல்லை தங்கராஜ் நடித்திருந்தார்.

இவரா இப்படி

யேறும் பெருமாள் படத்தில் இவருடைய நடிப்பு நம் அனைவரையும் கண்கலங்க செய்தது. இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் மாரி செல்வராஜ் குறித்து சில அதிர்ச்சியளிக்கும் விஷயங்களை கூறியுள்ளார்.

இதில், முதன் முதலில் நெல்லை தங்கராஜ் இப்படத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்துள்ளாராம். ஆனால், 30 பேரை வைத்து இவரை கடத்திவிட்டார்களாம். அதன்பின் படத்தில் நடிக்கும் போது சில வசனங்களை மறந்து நேரத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் உடனே வந்த தன்னை கன்னத்தில் அடித்ததாக கூறியுள்ளார்.

அதன்பின் நெல்லை தங்கராஜிடம் சென்ற இயக்குனர் மாரி செல்வராஜ், “இந்த காட்சியை நீங்க எத்தனை முறை தான் நடிப்பீங்க, இதுதான் உங்க கடைசி முறை, சரியா நடிச்சிருங்க. நீங்க ஊர் ஊரா போய் பேர் வாங்கி இருக்கலாம், ஆனால், இந்த ஒரு படத்தில் நடித்தால் உலகமெங்கும் பேர் வாங்கலாம்” என கூறி நெல்லை தங்கராஜை சமாதானம் செய்தாராம் மாரி செல்வராஜ்.

மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் தன்னை பாதித்தது என்று மாரி செல்வராஜ் பேசிய பிறகு தான் அவருக்கு பதிலடி கொடுப்பதற்காக கமல் ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள் என கூறப்படுகிறது.

Related posts

குடும்பத்தோடு இளையராஜா கேக் வெட்டி கொண்டாடிய 80-வது பிறந்தநாள்! வைரலாகும் போட்டோஸ்!

News Bird

வைத்தியர் அர்ச்சுனா பிணையில் விடுதலை!

News Bird

ட்விட்டருக்கு வந்த சோதனை | ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் ஃபேஸ்புக்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0