- உலகின் மிகப்பெரிய கடல் ஆமை இனமாகக் கருதப்படும் ஆமை ஒன்று இன்று (ஜூன் 03) பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் இந்த ஆமைகள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக பாணந்துறை கரையோரக் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாணந்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆமை 6-7 அடி நீளமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஆமை பாதுகாப்பு திட்டத்தின் (TCP) திட்டத் தலைவர் துஷான் கபுருசிங்க,
இலங்கை, அந்தமான் மற்றும் நிக்கோபார் போன்ற வெப்பமண்டல தீவுகளின் கடற்கரைகளுக்கு இந்த கடல் ஆமைகள் முட்டையிடுவதற்காக மட்டுமே செல்வது வழக்கம்.
இவை கரைக்கு வரும் நேரத்தில் முட்டையிடும், முட்டையிட்ட பிறகு, அவை உடனடியாக கடலுக்குத் திரும்புகின்றன.
மேலும் குறித்த கடல் ஆமைகள் 1970 முதல் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளன.