80.58 F
France
June 24, 2025
இலங்கை

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு

லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபாய் ஆகும்.

 

அதேபோல், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1281 ரூபாவாகும்.

 

 

2.3 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

இந்த விலைத் திருத்தம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

Related posts

காலிக்கு அருகில் மீன்பிடி படகு தீ விபத்து : கடற்படையினர் அதிரடி..!

News Bird

பிரபல நடிகை பூர்வீகாவுக்கு அடித்த அதிஷ்டம் (Video)

News Bird

CCTV வீடியோ – பட்ட பகலில் தங்க சங்கிலியை அறுத்த இளைஞர்களின் கைவரிசை!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0