March 13, 2025
சினிமா

மணப்பெண் ஒருத்தி… மாப்பிள்ளை இரண்டு பேர்…..!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ சீரியலிற்கு என்று ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதில் சமீபகாலமாக ரசிகர்கள் பலரது மனதில் ஓடிக் கொண்டிருக்கும் வினா என்னவெனில் ஆதிரை கல்யாணம் இறுதியில் யாருடன் நடக்கும் என்பது தான்.

இந்நிலையில் ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் அனைவரும் கோலாகலமாக கல்யாணத்திற்கு தயாராகி நிற்கின்றனர். அப்போது ஜனனி “கல்யாணப் பொண்ணு ஒருத்தி, மாப்பிள்ளை இரண்டு பேர்” என்கிறார். அதற்கு ரேணுகா “ஒண்ணு இங்க நிக்குது, இன்னொன்னு அங்க நிக்குது” என்கிறார்.

மேலும் யாரோ ஒரு நபர் “அது சரி யாருடன் கல்யாணம்” எனக் கேட்கின்றார். அதற்கு குணசேகரன் “யார்டா அந்த கேள்வியைக் கேட்ட அறிவாளி, தினம் நைட் ஒன்பது மணிக்கு கத்தோ கத்துன்னு கத்திட்டு இருக்கேன் இந்த பைத்தியக்காரன் கூடத் தான் கல்யாணம் என்று, அது உன் காதில விழலையா” எனக் கூறி கரிகாலனை சுட்டிக் காட்டுகின்றார்.

மறுபுறம் ஜனனி “நீங்க கத்தோ கத்துன்னு கத்திட்டு இருங்க நாங்க நடத்திக்கிட்டே இருக்கோம்” என்கிறார். பதிலுக்கு குணசேகரன் என்ன நாடகமா எனக் கேட்கின்றார்.  அதற்கு ரேணுகா “இல்ல நாம கல்யாணத்தை சொன்னோம்’ என்கிறார்.

இறுதியில் ஆதிரை கல்யாணம் யாருடன் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Related posts

மாளவிகாவின் கியூட் போட்டோஸ்-க்கு குவியும் கவிதை மழை

News Bird

ரசிகர்களை ஏமாற்றிய லீயோ படத்தின் பர்ஸ்ட் லுக்

News Bird

`எனக்கும் யாஷிகாவுக்கும்…’ – வைரல் புகைப்படம் குறித்து ரிச்சர்ட் ரிஷி விளக்கம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0