78.78 F
France
September 8, 2024
இலங்கைவிளையாட்டு

சரித் அசலங்கவை 80,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுத்த Jaffna Kings

2023 Lanka Premier League T20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களை ஏலத்தில் விடும் நடவடிக்கை இன்று கொழும்பில் நடைபெற்றது.

Jaffna Kings அணி சரித் அசலங்கவை 80,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுத்தது.

இம்முறை  Lanka Premier League T20  கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் சுமார் 360 வீரர்கள் பங்கேற்றனர்.

தனஞ்சய சில்வா மற்றும் பினுர பெர்னாண்டோ ஆகியோர் Dambulla Aura அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

தினேஷ் சந்திமால் 72,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, B-Love Kandy அணியுடன் இணைந்து கொண்டார்.

பாகிஸ்தானின் Shoaib Malik, Jaffna Kings அணிக்காக 50,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

விஜயகாந்த் வியாஸ்காந்தை 18,000 டொலருக்கும் தீசன் விதூஷனை 5000 டொலருக்கும் பெத்தும் குமாரவை 5000 டொலருக்கும் Jaffna Kings அணி ஏலத்தில் எடுத்தது.

துஷ்மந்த சமீரவை B-Love Kandy அணி 72,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுத்தது.

துனித் வெல்லாகேவை 56,000 அமெரிக்க டொலருக்கு Jaffna Kings அணி ஏலத்தில் எடுத்தது.

இதேவேளை, 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் Shevon Daniel  22,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

2023 Lanka Premier League ஜூலை மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Related posts

கொழும்பில் தீவிரமாக டெங்கு நோய் பரவும் அபாயம்

News Bird

யாழ்ப்பாணத்தில் காணி கேட்ட மக்களுக்கு பிஸ்கட் கொடுத்த கடற்படையினர் : பிஸ்கட்டை வாங்க மறுத்த மக்கள்..!

News Bird

கிழக்கு மாகாணத்தில் பாரிய நிதிமோசடி

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0