January 18, 2025
இலங்கை

மனைவியின் முன்னால் கணவனின் மகளை துஷ்பிரயோகப்படுத்திய செய்த இன்னால் கணவர்.!

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட ஒருவருக்கு பாணந்துறை நீதிமன்றம் 15 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இங்கிரிய பிரதேசத்தை சோ்ந்த 50 வயதுடைய சந்தேகநபருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, 5,000 ரூபா அபராதம் விதித்த நீதிமன்றம், அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், மேலும் ஒரு மாதம் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து உத்தரவிட்டது.

மனைவியின் முதலாவது திருமணத்தின் போது பிறந்திருந்த 11 வயது மகளை, 2007 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடா்பில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதன்படி சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இழப்பீட்டை மைத்திரிபால சிறிசேன செலுத்தினார்

News Bird

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞர் விபத்தில் பலி!

News Bird

ஆச்சரியம் ஆனால் உண்மை : பிரான்ஸில் இளம் பெண்ணை தாக்கிய விண்கல்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0