84.18 F
France
March 12, 2025
இலங்கை

மாணவனை தாக்கிய அதிபா் கைது!

மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள கனிஷ்ட பாடசாலை ஒன்றில் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதிபர் தாக்கியதில் அந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மாணவனிடம் ஏ4 தாளினை கொண்டு வருமாறு கூறியும் அவர் கொண்டு வராமை காரணமாக அதிபா் மாணவனின் முதுகில் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் வீட்டுக்குச் சென்ற மாணவன் திடீரென வாந்தி எடுத்ததையடுத்து பெற்றோர் அது குறித்து வினவியுள்ளனா்.

இதன்போது அதிபா் தாக்கியமை தொடா்பில் பெற்றோரிடம் மாணவா் கூறியுள்ளார்.

பின்னா் அவரை அக்குரஸ்ஸ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மாணவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதனையடுத்து பெற்றோர் சம்பவம் தொடா்பில் பங்கம பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த அதிபர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (17) மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

யாழ்ப்பாணத்தில் முதியவரை கடத்திய இளம் பெண் ..!

News Bird

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு

News Bird

பேராதனை வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் மற்றும் ஓர் இளம் பெண் உயிரிழப்பு..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0