82.38 F
France
November 27, 2024
இலங்கை

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இந்தியாவில் தலைமறைவாகி இருந்தாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன் என்பவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்கப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

இலங்கையால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின் பிரகாரம், சர்வதேச பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்பட்ட செல்வபாக்கியம் சுதாகரன் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்திருந்த ஆலோசனைக்கு அமையவே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர், தங்களுடைய பிரிவில் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாகப் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

விசாரணைகளின் ஊடாக தகவல்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் இந்நாட்டுப் படையினருக்குத் தகவல்களை வழங்கிய நபர்களைப் படுகொலைச் செய்தல் உள்ளிட்டவை இந்த சந்தேகநபர் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான திட்டங்களை இக்குழுவினர் தீட்டி வந்ததாக விசாரணைகளின் ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

நீதிமன்றத்தில் அறிக்கை

மூதூர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர், 2019ஆம் ஆண்டு நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண பிரபல தலைவரான “இலங்கீத் மாஸ்டர்” என்பவரு​டனேயே இவர் தப்பிச் சென்றதாக விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விருவரும் நாட்டுக்குள் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிதி சேகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டதாக நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் குறைகிறது லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை..!

News Bird

இலங்கை சுகாதார அமைச்சுக்கு முன்பாக சத்தியாகிரகம்..(வீடியோ)

News Bird

மனுஷ மற்று்ம் ஹரினின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0