76.98 F
France
September 8, 2024
இந்தியாஇலங்கைசர்வதேசம்

84 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான மோசமான நிலநடுக்கம்..!

பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு நாடுகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி பாகிஸ்தானில் இன்று காலை 5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 170 ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் ஊடாக சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தோனேசியாவிலும் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207 கி.மீட்டர் தொலைவில் 131 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கும் உணரப்பட்டுள்ளது.

இதனால் சுனாமி அலை உருவாவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் சேதம் எதுவும் எற்படவில்லை என்றும் தெரிவி்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு தொடக்கம் முதலே உலகம் முழுவதும் பல்வேறு நிலநடுக்கங்கள் பதிவாகின.

குறிப்பாக துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஒட்டிய பகுதிகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

கடந்த 84 ஆண்டுகளில் இது மோசமான பேரிடர் என்று துருக்கி அதிபர் தெரிவித்திருந்தார்.

Related posts

“கருவில் இருந்த மூன்று குழந்தைகளும் தாயும் மருத்துவமனையில் பலி”

News Bird

பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் : அச்சத்தில் மக்கள் !

News Bird

எரிபொருட்களின் விலையில் மாற்றம் | 92 ரக பெட்ரோல் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரிப்பு ..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0