84.18 F
France
November 22, 2024
இலங்கை

ஜனாதிபதி சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காண்டி நடந்துக்கொள்ள வேண்டும் – மேர்வின் சில்வா

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சுற்றியுள்ள அடிவருடிகள், அவருக்கு நாட்டை ஆட்சி செய்ய இடமளிக்காது, அவர்களின் குறுகிய அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயற்சித்து வருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

களனியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடு அன்று வீழ்ச்சியடைந்து எதனையும் செய்ய முடியாத நிலைமையில் இருந்த போது நாட்டை காப்பாற்ற எவரும் முன்வரவில்லை.

அனுபவமிக்க அரசியல்வாதியான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வித தயக்கமும் இன்றி நாட்டை பொறுப்பேற்றார்.

ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு கோரிய போது சஜித் ஓடி ஒழிந்துக்கொண்டார்.

ஜனாதிபதி தன்னை சுற்றியுள்ள சந்தர்ப்பவாதிகளை அடையாளம் கண்டு அவர்களின் ஆலோசனைகளை ஓதுக்கி வைத்து விட்டு, நாட்டை கட்டியெழுப்பும் பணிகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் விற்பனை செய்யப்பட உள்ள இலாபத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் பட்டியல் எனக்கு கிடைத்துள்ளது.

இந்த நிறுவனங்களை விற்பனை செய்யும் இரகசிய சூழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே முற்பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பான முழு விபரங்களை விரைவில் வெளியிடுவேன்.

நாட்டை கட்டியெழுப்புவதற்காக இந்த முடிவுகள் எடுக்கப்படவில்லை, அமைச்சர்களுக்கு பயனை பெறுவதற்காகவே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் பணப் பேராசையில் இருக்கின்றனர். நாட்டை நேசிக்கவில்லை. தரகு பணத்திற்கு அனைவரும் அடிப்பணித்துள்ளனர்.

இலாபத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கேள்விப்பத்திரங்கள் மூலம் அரச நிறுவனங்களை தேசிய வர்த்தகர்களுக்கு வழங்கி அவற்றை முன்னேற்ற இடமளிக்க வேண்டும்.

பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் அல்லாத வெளிநாடு வாழ் இலங்கையர்களுக்கு நாட்டில் இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களை கட்டியெழுப்பும் பொறுப்பை வழங்க வேண்டும்.

அமெரிக்காவில் எரிபொருள் நிலையத்தில் வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிய பசில் ராஜபக்ச தற்போது கோடிஸ்வரர்.

வெளிநாட்டு வங்கிகளின் வங்கிக்கணக்குள், அமெரிக்காவில் வீடுகள்,மிகப் பெரிய செல்வம் பசில் ராஜபக்சவுக்கு எப்பபடி கிடைத்தது.

அவை நாட்டில் கொள்ளையிடப்பட்டவை எனவும் மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரும் கணவரும் பொலிஸ் நிலையத்தில் அடிதடி சண்டை..!

News Bird

1.5 பில்லியன் ரூபாய் திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ நிருவனம்..!

News Bird

பிரபல நடிகை பூர்வீகாவுக்கு அடித்த அதிஷ்டம் (Video)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0