76.98 F
France
September 8, 2024
இலங்கை

இலங்கையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும்…!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் கட்டாயம் நாட்டில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகும் என ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமன பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக இந்த பொருளாதார நெருக்கடி உருவாகும்.

வெளிநாட்டு கடனை திரும்ப செலுத்துவது ஆரம்பிக்கப்படும்.

வெளிநாட்டு கடன் திரும்ப செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதன் காரணமாக மீதமாகியுள்ள அந்நிய செலாவணியை பயன்படுத்தியே அரசாங்கம் அத்தியவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்து வருகிறது.

நாட்டில் காணப்படும் தற்போதைய நிலைமையானது தற்காலிகமானது, செப்டம்பர் மாதத்திற்கு பின்னர் அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம்.

அதேவேளை நான் ஜனாதிபதியாக பதவி வருவது குறித்து சிலர் அச்சத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

நான் ஜனாதிபதியாக பதவி வருவதற்கு தகுதியில்லை என்பதற்கான காரணங்களை எவரும் இதுவரை முன்வைக்கவில்லை.

ஊழல் அரச அதிகாரிகள், மோசடியான வியாபாரிகள், மோசடியான குடும்ப ஆட்சியாளர்கள் நான் ஜனாதிபதியாக பதவி வருவதை விரும்பவில்லை என்பதுடன் நான் அந்த பதவிக்கு வந்தால் தமக்கு என்ன நடக்குமோ என்று அச்சப்படுகின்றனர் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Related posts

முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெருமா..? பாகிஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம்

News Bird

மனுஷ மற்று்ம் ஹரினின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது!

News Bird

எரிபொருட்களின் விலையில் மாற்றம் | 92 ரக பெட்ரோல் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரிப்பு ..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0