April 2, 2025
இலங்கை

சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் பொலிஸாரினால் முற்றுகை!

மட்டக்களப்பில் சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் இன்று காலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய புண்ணச்சோலை, குமாரபுரம் ஆகிய பகுதிகளில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அனுமதிப் பத்திரம் இன்றி சட்ட விரோத முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் மதுபானப் போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணிடம் இருந்து 180 மில்லி லிட்டர் கொள்ளளவு உடைய 165 மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மதுபான விற்பனை ஈடுபட்ட பெண்ணையும் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மூன்று பிரதேசங்களுக்கு விசேட அதிரடிப்படை , இராணுவத்தினரின் பலத்த பாதுகாப்பு (வீடியோ)

News Bird

வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு : இடியுடன் கூடிய மழை மற்றும் கடல் கொந்தளிப்பு

News Bird

“கருவில் இருந்த மூன்று குழந்தைகளும் தாயும் மருத்துவமனையில் பலி”

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0