76.98 F
France
September 8, 2024
இலங்கை

கனடா செல்ல காத்திருப்போருக்கான மகிழ்ச்சியான தகவல்…!!

கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு கனடா அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு குடியேறிகளுக்கு சந்தர்பம் வழங்கும் புதிய திட்டம் ஒன்றை கனடா அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.

ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களுக்கு குடியேற்ற விண்ணப்பங்களின் போது அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இது குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
விண்ணப்பங்களின் போது முன்னுரிமை

சுகாதார துறை
விஞ்ஞான, தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியதுறைகள்
தச்சு வேலை, குழாய் பொருத்துதல் மற்றும் ஒப்பந்த பணிகள்
போக்குவரத்து,
விவசாயம் மற்றும் விவாசய உணவு

ஆகிய ஐந்து துறைகளில் அனுபவம் உடையவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு அதிகளவ முன்னுரிமை அளிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு மொழியாற்றல் காணப்பட்டால் அதுவும் விசேட தகைமையாகக் கருத்திற் கொள்ளப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த பிரதான ஐந்து துறைகளைச் சேர்ந்த 82 தொழில்களுக்காக தெரிவு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் ப்ரேசர் அறிவித்துள்ளார்.

நாட்டில் தொழிற்சந்தையில் சில துறைகளில் ஆளணி வளப் பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

துறைசார் சிறப்புத் தேர்ச்சியுடைய தகுதியான பணியாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் ப்ரேசர் தெரிவித்துள்ளார்.

Related posts

வைத்தியசாலையில் 40 அடி பள்ளத்தில் விழுந்த கார்..!.

News Bird

திருமணத்திற்கு பின்பும் அந்த நடிகருடன் படுக்கை காட்சியில் நடித்த நடிகை பூர்ணா (வீடியோ)

News Bird

நல்லூர் திருவிழாவுக்கு கொழும்பில் இருந்து சொல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி …!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0