உலகிலேயே பெரிய சிறுநீரக கல்லை அகற்றி, கிண்ணஸ் உலக சாதனையை இலங்கை இராணு வைத்தியர்கள் நிகழ்த்தியுள்ளனர்.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் முதலாம் திகதி இந்த சத்திர சிகிச்சை நடத்தப்பட்டு, உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவிக்கின்றது.
இவ்வாறு சிறுநீரகத்திலிருந்து அகற்றப்பட்ட கல்லானது, 13.372 சென்றீ மீட்டர் நீளமானது என்பதுடன், 801 கிராம் எடையை கொண்டமைந்துள்ளது.
இந்தியாவில் 2004ம் ஆண்டு நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை ஒன்றிலேயே உலகில் பெரிய சிறுநீரக கல் எடுக்கப்பட்டிருந்தது. அந்த கல்லின் நீளமானது 13 சென்றீ மீட்டர் என கிண்ணஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாகிஸ்தானில் 2008ம் ஆண்டு நடத்தப்பட்ட சத்திர சிகிச்சை ஒன்றில் உலகிலேயே அதிக எடை கொண்ட சிறுநீரக கல் அகற்றப்பட்டது, அதன் எடை 620 கிராம் என கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.