80.58 F
France
October 31, 2024
இலங்கை

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி தோண்டும் பணிகள் ஆரம்பம்..!

முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத்தொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜா இந்த அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்ட வைத்திய அதிகாரி, தடய வைத்திய நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு உட்பட ஏனைய நிபுணர்களை இந்த சந்தர்ப்பத்தில் கலந்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் மத்திய கொக்குத்தொடுவாய் பகுதியில் நிலத்தடி குடி தண்ணீர்க் குழாய்களைப் பொருத்துவதற்காக வீதியோரம் குழி தோண்டப்பட்ட போது இந்த மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

Related posts

வடக்கில் அநாகரீகமான உடையில் அலையும் பொலிஸார்?

News Bird

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு ICC அபராதம் விதித்துள்ளது.

News Bird

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவுக்கு செல்கிறார்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0