84.18 F
France
March 12, 2025
இலங்கை

போதை விருந்தில் சிக்கிய பேஸ்புக் நண்பர்கள் : பொலீசார் அதிரடி சுற்றிவலைப்பு

பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் ஊடாக பன்வில, மடோல்கெலே பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பன்வில பொலிஸ் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்த விருந்தில் 13 பெண்கள் உட்பட 112 பேர் கலந்து கொண்டிருந்த நிலையில் அவர்களை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் வைத்திருந்த 10 பேரும் விருந்தினை ஏற்பாடு செய்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேக நபர்கள் மாத்தறை, நாரம்மல, அம்பதென்ன, உக்குவலை, கம்பளை, நுவரெலியா மற்றும் பேராதனை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 21 மற்றும் 33 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் இடம் பெற காத்திருக்கும் மாபெரும் மாற்று மோதிரம் நிகழ்ச்சி

News Bird

இலங்கை பொலிஸாரின் தாக்குதலில் மாணவன் வைத்தியசாலையில்

News Bird

இலங்கையில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் முன்னால் ஆர்ப்பாட்டம்..! (வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0