78.78 F
France
September 12, 2024
இலங்கை

இலங்கை விமானிகளின்றி பறக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்?

அனைத்து விமானிகளும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை விட்டு வெளியேறினாலும், வெளிநாட்டு விமானிகளை அமர்த்தி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்ந்தும் இயக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிவில் விமான சேவைகள் அதிகார சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் மறுசீரமைப்பில், நிறுவனத்தின் நிர்வாக முடிவுகளை எடுப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு முழு உரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

“கொவிட் நெருக்கடி காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைப்பட்டன. இதனால், பல விமானங்கள் தரையிலேயே இருந்தன.  ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. அந்த விமானிகளை 50% சம்பளத்தில் வைத்துள்ளோம். கொவிட் காலத்தில், தங்கள் விமானங்கள் செல்லாது என்று கூறி குவைத் ஏர்லைன்ஸின் சுமார் 70 விமானிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்றார்.

விமான சேவையின் மறுசீரமைப்பு மற்றும் விமானிகள் வெளியேறுவது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்,

“260 விமானிகள் கொண்ட குழு இன்னும் இலங்கையில் தங்கியுள்ளது. அவர்கள் துபாய் அல்லது சிங்கப்பூர் சென்றால், அவர்களுக்கு பாாியளவான சம்பளம் கிடைக்கும் என எண்ணுகின்றனர். ஆனால் அந்த நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகம். அதையும் ஒப்பிட்டுப் பாருங்கள். புதிய விமானிகளுக்கான விண்ணப்பங்களை அழைக்கிறோம். ஆனால் சிலர் இந்த நாட்டில் இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் வெளியேறினால், வெளிநாடுகளில் இருந்து புதிய விமானிகள் பணியமர்த்தப்பட்டு, விமான சேவை தொடரும் என குறிப்பிட்டார்.

Related posts

What’s App பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ..!

News Bird

இலங்கையில் சிசேரியன் சத்திரசிகிச்சை ஊசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை

News Bird

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்…! (வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0