80.58 F
France
April 4, 2025
இலங்கை

யாழ்ப்பாணத்தில் 9 வயது மாணவியை மிருகத்தனமாக தாக்கிய அதிபர் கைது..!

யாழ்ப்பாணம் தீவக பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலையின் அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று (16) கைது செய்துள்ளனர்.

மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பத்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு பொலிஸாரிடம் வினவிய போது, தாம் அதிபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், நாளை (17) திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான உத்தியோகபூர்வ விசாரணைகளை நாளை முன்னெடுக்கவுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர்

Editor

ஹோட்டல் தொழிலில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா

News Bird

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கான முதற்கட்டம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0