கனடாவின் டொரன்டோ நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்துவதற்கு எவ்வளவு பணம் உழைக்க வேண்டும் என்பது பற்றி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் பிரகாரம் டொரண்டோ நகரின் குடியிருப்பு தொகுதி ஒன்றில் ஒரு படுக்கையறையை கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்துவதற்கு மணித்தியாலம் ஒன்றிற்கு 40 டாலர்களையேனும் உழைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் பிரதான நகரங்களில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்துவது சவால் மிக்க விடயமாக மாறி வருகின்றது.
அநேகமான நகரங்களில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்துவது மிகுந்த சவால் மிக்க காரியமாக அமையப்பெற்றுள்ளது.
குறிப்பாக டொரன்டோ போன்ற நகரங்களில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொள்வது என்பது அதிக செலவுமிக்க ஓர் நடவடிக்கையாக அமைந்துள்ளது.
குடியிருப்பு தொகுதி ஒன்றில் ஒரு படுக்கையறை கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்துவதற்கு குறைந்தபட்ச வருமானத்தை உழைக்கும் நபர் ஒருவர், இரண்டு முழு நேர வேலை செய்தாலும் முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
அதாவது கனடா டொரன்டோவில் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்த வேண்டுமாயின் குறித்த நபர் குறைந்தபட்சம் மணித்தியாலம் ஒன்றுக்கு 40 டாலர் அளவில் சம்பளம் பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வாரம் ஒன்றிற்கு 40 மணித்தியாலங்கள் வேலை செய்யும் நபர் ஒருவர் தனது மொத்த வருமானத்தில் 30% வாடகைக்கு செலவிடுகின்றார் என தெரிவிக்கப்படுகிறது.
வாடகைக்கும் சம்பளத்திற்கும் இடையிலான இந்த வேறுபாட்டை வாடகை சம்பளம் என அழைக்கின்றனர்.
மாகாணத்திற்கு மாகாணம் இந்த வாடகை சம்பளத் தொகையானது மாறுபட்டு காணப்படுகின்றது.
குறைந்த வருமானம் ஈடும் கனடியர்களினால் வீடு ஒன்றை பெருநகரமொன்றில் வாடகைக்கு அமர்த்த முடியாத நெருக்கடி நிலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.