கனடா பிரதமர் தெரிவித்த கருத்தை இலங்கையின் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 23ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டு வெளிவிவகார அமைச்சு இதனைக் குறிப்பிட்டது.
கனேடியப் பிரதமர் தனது அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் என்று குறிப்பிட்டுள்ளதை வெளிவிவகார அமைச்சு முற்றாக நிராகரிப்பதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கடந்த கால முரண்பாடுகள் குறித்து, அந் நாட்டின் தேர்தல் வெற்றியை இலக்காகக் கொண்டு வெளியிடப்படும் இவ்வாறான பொய்யான அறிக்கைகள் இன நல்லிணக்கத்திற்கு தடையாக இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்திற்கு ஆதரவளிக்குமாறு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கனடாவிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.