85.98 F
France
March 12, 2025
இலங்கை

நீர் கட்டண உயர்வு தொடர்பான முழுமையான விபரம்.!

நீர் கட்டணத்தை திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார்.

இந்த நீர்க் கட்டணத் திருத்தத்தின் மூலம் பயன்படுத்தப்படும் அலகுகளின் அளவிற்கேற்ப கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த கட்டண திருத்தத்தில் சமுர்த்தி பயனாளர்கள் மற்றும் பெருந்தோட்ட வீடுகளுக்கான நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்துத் துறைகளுக்கான நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வீட்டுப் பாவனைக்கான நீரின் முதல் 5 அலகுகளுக்கான கட்டணம் 20 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கட்டண திருத்தத்தில் பொது குடிநீர் குழாய்கள், பூங்கா நீர் குழாய்கள், அரசாங்க பாடசாலைகள், மத வழிபாட்டு தலங்கள், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரசாங்க  மருத்துவமனைகளின் குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளமை சிறப்பு அம்சமாகும்.

ஒரு அலகிற்கு வசூலிக்கப்படும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு மேலதிகமாக மாதாந்திர சேவைக் கட்டணமும் இந்தத் திருத்தத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நீர்க் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணங்களுக்கு மேலதிகமாக, நுகர்வோரின் கழிவுநீர்க் கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.

புதிய கட்டண உயர்வுகள் பின்வருமாறு,

0 – 5 ஒரு அலகு 60 ரூபா
மாத கட்டணம் 300 ரூபா

6 -10 ஒரு அலகு 80 ரூபா
மாத கட்டணம் 300 ரூபா

11 -15 ஒரு அலகு 100 ரூபா
மாத கட்டணம் 300 ரூபா

16 – 20 ஒரு அலகு 110 ரூபா
மாத கட்டணம் 400 ரூபா

21 – 25 ஒரு அலகு 130 ரூபா
மாத கட்டணம் 500 ரூபா

Related posts

இறந்த நிலையில் கரையொதுங்கிய கடற் பசு (படங்கள்)

News Bird

மனுஷ மற்று்ம் ஹரினின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது!

News Bird

“கருவில் இருந்த மூன்று குழந்தைகளும் தாயும் மருத்துவமனையில் பலி”

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0