மக்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்வருவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களின் பொருளாதார அசௌகரியத்தை வேறு விடயங்களினால் தூண்டிவிட அரசாங்கம் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தினால் கிடைக்கப்பெறும் கடனுதவிகள் மூலம் பொருளாதார பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியும் என அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது.
இருப்பினும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கப்பெற்ற போதிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் முன்வரவில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய குற்றஞ்சுமத்தியுள்ளார்.