76.98 F
France
September 8, 2024
இந்தியா

நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ ரொக்கெட்

வழிகாட்டி செயற்கைகோளை சுமந்தபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை விண்ணில் பாய்வதற்கு ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ரொக்கெட் தயார் நிலையில் உள்ளது.

இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து, இந்த ரொக்கெட்டை நாளை காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட ‘என்.வி.எஸ்.-01’ என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

ரொக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related posts

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

news

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர்

Editor

பிக் பாஸ் லாஸ்லியா GYM-ல் நண்பனுடன் வெறித்தனம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0