84.18 F
France
March 12, 2025
இந்தியா

புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கும் தினத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொலைநோக்கு பார்வையுடன் அதிக வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஏன் எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கின்றன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இதேவேளை புதிய நாடாளுமன்றம் திறக்கும் தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 19 கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் குறித்த தினத்தை கறுப்பு தினமாக அனுஸ்டிக்கவும்  தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிக்பாஸ் புகழ் யாழ்ப்பாண பெண் ஜனனி நடிகர் விஜய்யுடன் லியோ திரைப்படத்தில்..! (Photos)

News Bird

ரசிகர்களை ஏமாற்றிய லீயோ படத்தின் பர்ஸ்ட் லுக்

News Bird

டைட்டானிக் கப்பலை பார்லையிட சென்ற சுற்றுலாப்பயணித்த நீர்மூழ்கிக் கப்பல் மாயம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0