78.78 F
France
January 18, 2025
இலங்கை

தெஹிவளை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

தெஹிவளை ஓபன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு தீவிரமடைந்ததில் நபரொருவர் உயிரிழந்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பலத்த காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெஹிவளை ஓபன் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொலையை செய்த சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

பாதாள உலகக் குழு உறுப்பினர்களைக் கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் அதிரடி சுற்றிவளைப்பில்..!

News Bird

குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்தி பெண்ணொருவரின் உயிரை பறித்த மூடநம்பிக்கை..!

News Bird

இலங்கைக்கு இந்தியா வழங்கிய காலவகாசம்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0