பகிடிவதை சம்பவம் தொடா்பில் பேராதனை பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேருக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 10ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வகுப்புத்தடை தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.
சுமார் 21 சிரேஷ்ட மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு பழுதடைந்த உணவை உண்ணக்கூறி, கடுமையான வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளமை தொியவந்துள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
எனினும் சம்பவம் தொடா்பில் 11 மாணவா்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பகிடிவதை சம்பவங்கள் தொடா்பில் பேராதனை பல்கலைகழகத்தின் மேலும் 08 மாணவர்களுக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் மேலும் குறிப்பிட்டுள்ளார்