78.78 F
France
January 18, 2025
இலங்கைவிளையாட்டு

வரலாற்றில் தடம் பதித்த இலங்கை மகளிர் அணி தலைவி சமரி அத்தபத்து!

சர்வதேச கிரிக்கட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் துடுப்பாட்ட வீராங்கனை பட்டியலில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து முதலிடத்தை எட்டியுள்ளார்.

6 இடங்கள் முன்னேறி அவர் இந்த இடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப் பயணத்தின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் சமரி அத்தபத்து இந்த இடத்தைப் பெற்றுள்ளார்.

நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் 83 பந்துகளில் 108 ஓட்டங்களை குவித்தார்.

ஒருநாள் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் சமரி அத்தபத்து 80 பந்துகளில் 140 ஓட்டங்களை விரைவாக குவித்து இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இரண்டு இன்னிங்சிலும் அவர் ஆட்டமிழக்காமல் ஆடியமை சிறப்பம்சமாகும்.

கிரிக்கட் தரவரிசையில் இலங்கை வீராங்கனை ஒருவர் முதலிடத்தை அடைவது இதுவே முதல் முறை ஆகும்.

Related posts

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான விசேட அறிவிப்பு

News Bird

3 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

News Bird

பூண்டுலோயாவில் 26 பேர் பயணித்த பேருந்து விபத்து..! (PHOTOS)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0