84.18 F
France
November 21, 2024
இலங்கை

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை..!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.

இதன்படி, திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில வரையான கடல் பிரதேசங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் கடல் அலையின் உயரம் 2.5-3 மீற்றர் வரை உயரக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கடல் சீற்றமாகவும், சில சமயங்களில் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

குறித்த கடல் பிரதேசங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கடற்றொழில் மற்றும் கடற்படை தரப்பினருக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

இலங்கையில் இருந்து சொந்த நாட்டிற்குச் சென்ற முத்துராஜா யானைக்கு பசி அதிகமாம்

News Bird

மற்றுமொரு பேருந்து விபத்து : 2 இருவர் உயிரிழப்பு..! (படங்கள்)

News Bird

கோழி இறைச்சியின் விலை 200 ரூபாவினால் குறைந்தது..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0