கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும், முட்டைகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை நிறுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை முட்டை 44 ரூபாவும் சிவப்பு முட்டை 48 ரூபாவும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று (06) வரை சில கடைகளில் முட்டை 60 ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குறிப்பிட்டுள்ளனர்.
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை விதித்ததையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொண்டதால், சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.