March 13, 2025
இலங்கை

இலங்கையில் சிசேரியன் சத்திரசிகிச்சை ஊசிகளுக்கு தட்டுப்பாடு இல்லை

சிசேரியன் சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹெவி மார்கேன் (Heavy Marcaine) மருந்துக்குதட்டுப்பாடு இல்லை எனவும் தற்போது 30,000க்கும் அதிகமான ஊசிகள் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹெவி மார்கேன் என்ற தடுப்பூசி வைத்தியசாலையில்இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன ஆகியோர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதேஅமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,

“.. களுத்துறை வைத்தியசாலையின் பணிப்பாளர் விடுத்துள்ள உள்ளக அறிவிப்பின் அடிப்படையில்எதிர்க்கட்சியினர் இவ்வாறு தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இலவச மருத்துவ சேவையை அழிக்க வேண்டாம்.

மேலும், களுத்துறை வைத்தியசாலையில் ஐம்பது டோஸ் ஹெவி மார்கேன் ஊசி போடப்பட்டுள்ளது. போதியகையிருப்பு உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பல எம்.பி.க்களால் இந்தச் சபையில் உடல்நலம்தொடர்பான மிகக் கடுமையான பிரச்சினை எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு எங்களுக்கு பதில் தேவை. நாடாளுமன்றத்தில் விரிவான விளக்கம் அளிப்பேன்.

பிரதி சபாநாயகர் அவர்களே, ஹெவி மார்கேன் என்ற மருந்து பற்றி களுத்துறை பணிப்பாளர் உள்ளககுறிப்பை அனுப்பியதை பற்றி நான் தெரிவித்திருந்தேன். இரண்டு வாரங்களுக்கு மட்டுமே மருந்து உள்ளதாகஉள்ளக குறிப்பு (Internal Memo) அனுப்பப்பட்டுள்ளது. எனவே இவ்விடயம் தொடர்பில் கவனம்செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மொத்த மருந்துகள் இருக்கும் இடத்திற்கு தான் அனுப்பப்பட வேண்டும். அவர் செய்தது தவறு. இதுபிரதான களஞ்சியசாலையில் இருந்து கோரப்பட வேண்டும். இது ஒரு பொறுப்பும் கடமையும் ஆகும்.

ஹெவி மார்க்கென் தடுப்பூசி 2022 இல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. விலைகள் குறித்துஎங்களால் கருத்து தெரிவிக்க முடியவில்லை…”

Related posts

உயிரை பறித்த செல்பி : செல்பி எடுக்க சென்ற 21 வயது யுவதி சடலமாக மீட்பு

News Bird

யாழ்ப்பாணத்தில் 9 வயது மாணவியை மிருகத்தனமாக தாக்கிய அதிபர் கைது..!

News Bird

காதலனை கடத்திய பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்த காதலி!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0