தற்போது விஜய் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். அவர் தற்போது 125 கோடி அளவுக்கு சம்பளம் வாங்கி வருகிறார். அடுத்த படத்திற்கு யாரும் எதிர்பார்காத அளவுக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் அவர் வாங்கப்போவதாகும் தகவல் வெளியாகி இருக்கிறது.விஜய்யின் அடுத்த படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க போகிறார்.
விஜய்யின் அப்பா எஸ்ஏசி ஆரம்பகட்டத்தில் விஜய்யை ஹீரோ ஆக்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜாவிடம் சென்று கேட்டாராம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.
‘விஜய்யை பார்த்து எனக்கு அவரை ஹீரோ ஆக்க தோன்றவில்லை’ என பாரதிராஜா தற்போது சினிஉலகத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் காரணத்தை கூறி இருக்கிறார்.