January 18, 2025
இலங்கை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் உயிரை காவு கொண்ட கோர விபத்து!

இன்று அதிகாலை 5.30 மணியளவில் துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்த மூவரின் சடலங்களும் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இ.தொ.கா தீர்மானம்!

News Bird

இலங்கை இளம் நடிகை பூர்வீகா வெளியிட்ட புகைப்படங்கள்..!

News Bird

பேராதனை வைத்தியசாலையில் செலுத்தப்பட்ட ஊசி மூலம் மற்றும் ஓர் இளம் பெண் உயிரிழப்பு..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0