January 18, 2025
இலங்கை

பாடசாலைக்கு அருகில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு !

கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று (21) காலை 8.00 மணியளவில் கல்லூரிக்கு அருகில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளாா்.

உயிரிழந்தவர் 33 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

இதேவேளை ஹோமாகம – நியந்தகல மற்றும் காலி- இத்தருவா ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கி பிரயோகங்களில் இருவா் உயிாிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வீதி போக்குவரத்து அபராத தொகை அதிகரிப்பு?

News Bird

நைஜீரிய பிரஜை ஒருவருக்கு இலங்கையில் மரண தண்டனை..!

News Bird

கனடா பிரதமரின் கருத்தை நிராகரித்து தக்க பதிலடி கொடுத்து இலங்கை!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0