வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட எமஸ்ட் தமிழ் வித்தியாலயம், தொடர்தேர்ச்சியாக மூன்றாவது முறையும்வலய மட்டத்திலான வொலிபோல் போட்டியில் 16 மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் அணிசாம்பியனாகியிருப்பதுடன், இம்முறை பெண்கள் அணி சார்பாக 16 வயதிற்கு உட்பட்டோர் 2ஆம் இடத்தையும், 18 வயதிற்கு உட்பட்டோர் 4ஆம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.