இதற்குமுன், ஆசியக் கோப்பை ஏதாவது ஒரேயொரு நாட்டில்தான் நடைபெற்றது.
ஆனால், முதல்முறையாக ஆசியக் கோப்பை 2023 தொடரை பாகிஸ்தானும், இலங்கையும் சேர்ந்து நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 13 போட்டிகள் நடைபெறும். இதில், பாகிஸ்தானில் நான்கு போட்டிகளையும், எஞ்சிய போட்டிகள் இலங்கையிலும் நடக்கும்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபால் ஆகிய மொத்தம் 6 அணிகள் இந்த ஆசியக் கோப்பை 2023 தொடரில் பங்கேற்கும்.
இந்த 6 அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து விளையாட உள்ளது. குரூப் ஏ பிரிவில் 3 அணிகளும், குரூப் பி பிரிவில் 3 அணிகளும் இடம்பெறும். இதில், இரு குழுவிலும் தலா முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுவிடும்.
இந்த சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் பைனலில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி இதுவரை 7 முறை ஆசியக் கோப்பையை வென்றிருக்கிறது. தற்போது, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்..
குரூப் A, குரூப் B பிரிவுகள்:
குரூப் A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபால் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது.
குரூப் B பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும் இருக்கிறது.
ஆசியக் கோப்பை 2023 அட்டவணை:
ஆகஸ்ட் 30: பாகிஸ்தான் vs நேபால் (முல்தான், பாகிஸ்தான்)
ஆகஸ்ட் 31: வங்கதேசம் vs இலங்கை (கண்டி, இலங்கை)
செப்டம்பர் 2: பாகிஸ்தான் vs இந்தியா(கண்டி, இலங்கை)
செப்டம்பர் 3: வங்கதேசம் vs ஆப்கானிஸ்தான் (லாகூர், பாகிஸ்தான்)
செப்டம்பர் 4: இந்தியா vs நேபால் (கண்டி, இலங்கை)
செப்டம்பர் 5: ஆப்கானிஸ்தான் vs இலங்கை (லாகூர், பாகிஸ்தான்)
குரூப் 4 சுற்று:
செப்டம்பர் 6: A1 vs B2 (லாகூர், பாகிஸ்தான்)
செப்டம்பர் 9: B1 vs B2 (கொலும்பு, இலங்கை)
செப்டம்பர் 10: A1 vs A2 (கொலும்பு, இலங்கை)
செப்டம்பர் 12: A2 vs B1 (கொலும்பு, இலங்கை)
செப்டம்பர் 14: A1 vs B1 (கொலும்பு, இலங்கை)
செப்டம்பர் 15: A2 vs B2 (கொலும்பு, இலங்கை)
பைனல்:
செப்டம்பர் 17 (கொலும்பு, இலங்கை)
இந்தியா vs பாகிஸ்தான்:
லீக் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் செப்டம்பர் 2ஆம் தேதி, சனிக்கிழமை மோதவுள்ளது. இந்த அணிகள் சூப்பர் 4 சுற்றில், செப்டம்பர் 10ஆம் தேதி ஞாயிறு அன்றும், பைனலில் செப்டம்பர் 17ஆம் தேதி பைனலிலும் மோத வாய்ப்புள்ளது. கிட்டதட்ட 15 நாட்களில் மூன்று முறை மோத வாய்ப்புள்ளது.