இந்த வார இறுதியில் சிங்கப்பூரில் நடைபெறும் வருடாந்திர பாதுகாப்பு மன்றத்தில் தங்கள் பாதுகாப்புத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பிற்கான அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளது
சிங்கப்பூரில் அடுத்த வாரம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஷங்ரி-லா உரையாடல் என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளருக்கும் சீன பாதுகாப்பு செயலாளருக்கும் இடையிலான சந்திப்பிற்காக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த அழைப்பை நிராகரித்துள்ள சீனா, அதற்கான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை.
2018 ஆம் ஆண்டு தற்போதைய சீன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இந்நிலையிலேயே இந்த விவாதத்தை சீனா நிராகரிக்க ஒரு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.