March 13, 2025
இலங்கை

மலையகத்தில் பாடசாலை சென்ற சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி! (VIDEO)

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை கடத்த முயற்சித்த சம்பவமொன்று பண்டாரவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பண்டாரவளை, மகுலெல்ல, வனசிரிகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டார்.

10 வயதுடைய சிறுமி மகுலெல்ல வித்தியாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறாள்.

சிறுமி வழமை போல்  டர்பன்டைன் பாதுகாப்பு வனப்பகுதி வீதியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.

அவ்வாறு சென்றுக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் தன்னை வலுக்கட்டாயமாக முச்சக்கரவண்டிக்கு ஏற்றிச் சென்றதாக சிறுமி மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் தன்னை முச்சக்கர வண்டியில் ஏற்றிய பின்னர் ஒரு வித பானத்தை குடிக்க கொடுத்ததாக கடத்தப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் அது கசப்பாக இருந்ததால், அவற்றை வாயில் வைத்திருந்த வௌியில் துப்பிவிட்டு முச்சக்கரவண்டியில் இருந்த பாய்ந்து சிறுமி தப்பியுள்ளார்.

பின்னர், முச்சக்கரவண்டியில் இருந்து தப்பிச் சென்ற குறித்த சிறுமி, பாடசாலைக்குச் சென்று வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தபோது, ​​வகுப்பு ஆசிரியர் இது குறித்து வினவியுள்ளார்.

பின்னர் அதிபர், ஆசிரியர் ஒருவருடன் சம்பந்தப்பட்ட சிறுமியை பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் மகளிர் பணியகம் தற்போது மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

அன்பர்களே இன்று வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்… ராசி பலன் – 05.07.2023

News Bird

இலங்கைக்கு மீண்டும் முத்துராஜா யானையை அனுப்ப மாட்டோம் : தாய்லாந்து அதிரடி

News Bird

மன்னார் பெண்ணின் மரணத்திற்கு உரிய நடவடிக்கை – சுகாதர அமைச்சர்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0