82.38 F
France
March 31, 2025
சினிமா

10 மொழிகளில் வெளியாகும் “கங்குவா” படத்திற்காக அதிரடி காட்டிய சூர்யா…!

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

“கங்குவா” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளான 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் கங்குவா படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யா தினமும் இரண்டரை மணி நேரம் மேக்கப்பிற்காக செலவழித்ததாக கூறப்படுகிறது. மேலும் கொடைக்கானலில் அடர்ந்த காடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புக்காக சூர்யா வெகுதூரம் நடந்து சென்றதாகவும், இருந்தும் சூர்யா படப்பிடிப்பு தளத்திற்கு சரியாக காலை 6.30 மணிக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வருகை..!

News Bird

`எனக்கும் யாஷிகாவுக்கும்…’ – வைரல் புகைப்படம் குறித்து ரிச்சர்ட் ரிஷி விளக்கம்

News Bird

அரசியல் களத்தில் குதிக்கும் நடிகர் விஜய்?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0